Pages

Saturday, July 31, 2010

முகம் தேடி.


நான் இன்னாறின் மகன் 
என்று அறியப்பட்டேன்
என் தந்தைக்கு பெருமை


நான் இன்னாறின் தந்தை
என்று அறியப்பட்டேன்
என் மகனுக்கு பெருமை


நான் நானாக அறியப்படுவது
எப்பொழுது.

Friday, July 30, 2010

மேன்மையானவர்கள்.

தாத்தா சொன்னது : கெட்டதைப்பேசாதே
கெட்டதைப்பார்க்காதே
கெட்டதைக்கேட்காதே

அரசியல்வாதி செயல் : வாய் இருந்தும் ஊமையாய்
கண் இருந்தும் குருடனாய்
செவி இருந்தும் செவிடனாய்

தனி மனித ஒழுக்கம் : நல்லதைப்பேசாதே
நல்லதைப்பார்க்காதே
நல்லதைக்கேட்காதே

இவர்களை விட
மாற்றுத்திறனாளிகள் நூறு சதம் மேன்மையானவர்கள்.

Wednesday, July 21, 2010

வாழ்வில் சந்தோஸம் எதில்!

கண்னாலம் கட்னாத்தான் சொர்க்கம் என்றான்
கண்னாலத்திற்க்கு முதல் நாள்
நாம் நினைபதற்க்கு எதிர்மறையாகவே
நடக்கிறது எல்லாம் என்றான் 
மூன்றாம் நாள்.

              ***

இறு வரி இனைந்து இறுக்கும் 
குறல்போல
நாம் இறுப்போம் என்றாள்

சொன்னதுபோல் தான் வாழ்கிறாள்
 கனவனுடன்.

          ***
வாழ்வில் சந்தோஸம் எதில் என்று
கேள்வி கேடவளே சொன்னாள்
வாழ்வதே சந்தோஸம் தானே என்று.

Sunday, July 11, 2010

பொய்யா?கற்ப்பனையா?

சில நண்பர்களுடன் அரட்டையில் இருந்தேன் அப்போது அரட்டை கவிதைப்பக்கம் திரும்பியது.

ஒருவன் சொண்னான் கவிதை எழுதுபவர்கள் எல்லாம் பொய்யர்கள் என்று.

எப்படி என்றேன்.

சிறு மரத்தையும் வின்னைத்தொடும் மரம் என்பான் சிறுக்குட்டையையும் பிரம்மாண்டமான ஏரி என்பான்.

நிலவைப்பெண் என்பான் பெண்னை நிலவு என்பான்.

மனிதனைக்கடவுள் என்பான் வார்த்தைக்கு அழகு சேர்க்க அந்தக்கடவுளையே இல்லை என்பான்.

மதுவில் சொர்க்கம் என்பான் தெளிந்தபின் கூடாது என்பான்.
இவையெல்லாம் பொய்யல்லவா என்றான்.

இது அவர்களின் கற்பனைத்திறன் என்றேன்.

இரண்டும் ஒன்றுதான் என்று சொல்லிவிட்டுச்சென்றுவிட்டான்.

Wednesday, July 7, 2010

வார்த்தையில் அழகானது



            என் பாட்டியை எனக்கு ரொம்பபிடிக்கும் நாங்கள் எல்லோரும் அவர்களை மூமா என்றே அழைப்போம்

எவ்வலவு கோவமாக இருந்தாலும் கடுஞ்சொல் அவர்கள் சொன்னது இல்லை.

அவர்கள் உபயோகித்த கோவச்சொல் இரண்டுதான்
ஒன்று அட நீ நல்லாஇருக்க ஏன்டா இப்படிப்பன்றேம்பாங்க
 மற்றொன்று அடி ஒந்தாலியகெட்ட என்பார்கள் கோவத்தில் கூட வாழ்த்தும் என் பாட்டியை எனக்கு ரொம்பப்பிடிக்கும்.

சரி இப்ப எதர்க்கு இது.

வலைப்பதிவில் தனிமனித வாய்க்கால் தகறாறும் மதம் என்ற வரப்பு தகறாறும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது.

நடுநிலையாளர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கைப்பார்த்துக்கொண்டிறுக்கிறார்கள்.

சொல்லவே நா கூசும் வார்த்தைகள்.
கேட்கவே செவி சிவக்கும் சொல்லாடல்கள்.
விமர்ச்சனம் என்ற பெயரில் நாகரிகம் அற்ற மொழியாடல்.

வேண்டாமே இவையெல்லாம்.

வார்த்தையில் அழகானதைச்சொல்லிப்பழகுவோம்.

Sunday, May 16, 2010

மூட நம்பிக்கை



கடந்த பிப்ரவரி 18 என் சகோதரனுக்கு
திருமணம் முடிந்தது உறவுக்காரப்பெண்னை
விறும்பி கரம்பிடித்தான் என் தாயின் அரைமனது சம்மதத்துடன்.

ஏன் அரை மனதுடன் சம்மதித்தார்கள் என்றாள்
அந்தபெண் பிறப்பின் வரிசையில் நான்காவதாக பிறந்தவள்.

அவங்களின் கணக்குப்படி நான்காவது பெண்னுடன் வழ்க்கையை
சந்தோஸமாக வாழமுடியாது கஸ்டமும் மனகுழப்பமும் பொருளாதாரத்தில்
பின்னடைவும் தான் இருக்கும் என்பது.

அவர்களை மூடநம்பிக்கையில் இறுந்து மாற்றி அரை சம்மந்தம் வாங்குவதர்குல்
பல உதாரணங்கலையும் பல தத்துவங்களையும் சில பொய்களையும்
சொல்லவேண்டிவந்தது

திருமணம் முடிந்து சில வாரங்கள் கலித்து தம்பி அம்மாவிடம்
சொண்னான் நான்காவதாக பிறந்தவளை கட்டியதால்
இன்று எனக்கு 2லட்சம் வாருமானம் வந்தது என்று

அம்மா கேட்டார்கள் இது உன் மூடநம்பிக்கை இல்லையா என்று.

Thursday, May 6, 2010

இவர்களுக்கு மரணதண்டனை???




மும்பை தாக்குதல் வழக்கில் உயிருடன் பிடிப்பட்ட
பயங்கரவாதி கசாப்புக்கு மரணத்தண்டனை
அறிவிக்கப்பட்டு விட்டது.
பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்

குற்றவாலி யாரா இருந்தாலும் குற்றத்திற்கு ஏற்ற தண்டனை
கொடுத்தே ஆக வேண்டும் இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து
கிடையாது

கசாப்புக்கு கிடைத்த தண்டனை சரியே

இந்தியாவில் சூத்திரனாக ( வேதத்திதின் படி தேவுடியா மகனாக )
பிறந்ததனால் ஒரு கிராமத்தையே தீ இட்டு கொலுத்தினார்களே
அவர்களுக்கு?

ஒரிசாவில் கிறிஸ்தவ பாதரியாரை குடும்பத்துடன் தீ இட்டு கொலுத்தினார்களே
அவர்களுக்கு?

குஜ்ராத்தில் பல அப்பாவி முஸ்லீம்களின் உயிரும் உடமையும் பறித்தார்களே
அவர்களுக்கு?

கசாப்புக்கு கிடைத்த தண்டனை சரியே
மற்றவர்களுக்கு எப்போது?

ஆவலுடன் திருவாளர் பொது ஜனம்!!!