சில நண்பர்களுடன் அரட்டையில் இருந்தேன் அப்போது அரட்டை கவிதைப்பக்கம் திரும்பியது.
ஒருவன் சொண்னான் கவிதை எழுதுபவர்கள் எல்லாம் பொய்யர்கள் என்று.
எப்படி என்றேன்.
சிறு மரத்தையும் வின்னைத்தொடும் மரம் என்பான் சிறுக்குட்டையையும் பிரம்மாண்டமான ஏரி என்பான்.
நிலவைப்பெண் என்பான் பெண்னை நிலவு என்பான்.
மனிதனைக்கடவுள் என்பான் வார்த்தைக்கு அழகு சேர்க்க அந்தக்கடவுளையே இல்லை என்பான்.
மதுவில் சொர்க்கம் என்பான் தெளிந்தபின் கூடாது என்பான்.
இவையெல்லாம் பொய்யல்லவா என்றான்.
இது அவர்களின் கற்பனைத்திறன் என்றேன்.
இரண்டும் ஒன்றுதான் என்று சொல்லிவிட்டுச்சென்றுவிட்டான்.