Pages

Friday, October 23, 2009

அயல் நாட்டு அகதிகள்


நன்றி மன்னை அலி

Friday, October 16, 2009

அனானிகளுக்கு

என் வலைஉலக அனானி நண்பர்களே தயவு செய்து உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் உங்கள் சொந்த முகவரியில் வந்து கருத்தை தெரிவியுங்கள் இந்த வலையுலகில் கருத்துக்கள் இடையே தான் வாதமும் விவாதமும் தவிர தனிப்பட்ட மனிதனுக்கிடையில் அல்ல!

(ராஜவம்சம்;நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் ஆனால் மூடநம்பிக்கை இள்ளாதவன்

வால் பையன்;என்னை பொருத்தவரை கடவுள் நம்பிக்கையே ஒரு மூடநம்பிக்கை தான்)

இப்படி அவர்ரவர் கருதுக்களை பரிமாரிக்கொள்வது தவறில்லை

நான் பல பதிவுகளில் பார்த்திருகிறேன் விவாதம் என்ற பெயரில் தகாத வார்த்தைகளை சிலர் பயன் படுத்துவது தேவையில்லாமல் பெற்றோரை இழுப்பது ஏன்.
இப்படி நாகரிகம் இல்லாமல் எப்படி சிலரால் எழுதமுடிகிறது என்று தெரியவில்லை. முகவரியில் வரும் நண்பர்களும் தங்களுடைய கருத்தை தெளிவாகவும் அதே நேரம் அழகாகவும் தெரிவியுங்கள் இங்கே கருத்து தான் முக்கியமே தவிர தனி நபர் விமர்சனத்திர்கு அல்ல!அவர்கள் மனம் புன்படுவதர்கு அல்ல!
இந்த வலையுலகம் என்பது ஒரு சிறந்த கருத்து பரிமாற்றம் செய்யகூடிய உலகம் இதை நாம் அனைவரும் சரியான முறையில் பயன் படுதுவோமாக

எப்படி பரவியது (விளக்கம் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்)

வாஷிங்க்டன்,அக் 13 உலகத்தில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு அந்த மக்கள் தொகை அதிகரித்துள்ளது.சமீபத்தில் மத அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது.இந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் 232 நாடுகளில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.157 கோடி முதல் 180கோடி வரை முஸ்லிம் சமூகத்தினர் எண்ணிக்கை உள்ளது.

லெபனான் முஸ்லிம் நாடு இருப்பினும் இந்த நாட்டை விட ஜெர்மனியில் அதிக முஸ்லிம் மக்கள் உள்ளனர்.இதே போல சிரியா முஸ்லிம் நாடு ஆனால் இந்த நாட்டை விட சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர்.

(இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற தப்பான கருத்து பரவியுள்ளது ஜெர்மனியிலும் சீனாவிலும் மற்றும் ரஷ்யாவிலும் எப்படி பரவியது)

ஜோர்டான் மற்றும் லிபியாவை ட ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.ஆப்கானிஸ்தானிலும்,எத்தியோப்பியாவிலும் சம விகிதத்தில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.உலகம் முழுவதும் 220 கோடி கிருஸ்தவர்கள் உள்ளனர்.இவர்களுக்கு அடுத்த படியாக முஸ்லிம் சமூகத்தினர் தான் அதிக அளவில் உள்ளனர்.அதாவது மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு முஸ்லிம் சமுதாயத்தினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அரபு நாட்டவர்கள் தான் முஸ்லீம்கள் என்ற நிலை தற்போது மாறி விட்டதாக பிரின்ஸ்டோன் பல்கலைக்கழக பேராசிரியர் அமானே ஜமால் தெரிவித்துள்ளார் இந்த செய்தி மலேசியாவில் இருந்து வெளியாகும் தமிழ் நேசன் என்ற தினசரி பத்திரிகையில் 13.10.09வெளியாகியுள்ளது.

நன்றி டி.என்.டி.ஜெ