Pages

Saturday, July 31, 2010

முகம் தேடி.


நான் இன்னாறின் மகன் 
என்று அறியப்பட்டேன்
என் தந்தைக்கு பெருமை


நான் இன்னாறின் தந்தை
என்று அறியப்பட்டேன்
என் மகனுக்கு பெருமை


நான் நானாக அறியப்படுவது
எப்பொழுது.

Friday, July 30, 2010

மேன்மையானவர்கள்.

தாத்தா சொன்னது : கெட்டதைப்பேசாதே
கெட்டதைப்பார்க்காதே
கெட்டதைக்கேட்காதே

அரசியல்வாதி செயல் : வாய் இருந்தும் ஊமையாய்
கண் இருந்தும் குருடனாய்
செவி இருந்தும் செவிடனாய்

தனி மனித ஒழுக்கம் : நல்லதைப்பேசாதே
நல்லதைப்பார்க்காதே
நல்லதைக்கேட்காதே

இவர்களை விட
மாற்றுத்திறனாளிகள் நூறு சதம் மேன்மையானவர்கள்.

Wednesday, July 21, 2010

வாழ்வில் சந்தோஸம் எதில்!

கண்னாலம் கட்னாத்தான் சொர்க்கம் என்றான்
கண்னாலத்திற்க்கு முதல் நாள்
நாம் நினைபதற்க்கு எதிர்மறையாகவே
நடக்கிறது எல்லாம் என்றான் 
மூன்றாம் நாள்.

              ***

இறு வரி இனைந்து இறுக்கும் 
குறல்போல
நாம் இறுப்போம் என்றாள்

சொன்னதுபோல் தான் வாழ்கிறாள்
 கனவனுடன்.

          ***
வாழ்வில் சந்தோஸம் எதில் என்று
கேள்வி கேடவளே சொன்னாள்
வாழ்வதே சந்தோஸம் தானே என்று.

Sunday, July 11, 2010

பொய்யா?கற்ப்பனையா?

சில நண்பர்களுடன் அரட்டையில் இருந்தேன் அப்போது அரட்டை கவிதைப்பக்கம் திரும்பியது.

ஒருவன் சொண்னான் கவிதை எழுதுபவர்கள் எல்லாம் பொய்யர்கள் என்று.

எப்படி என்றேன்.

சிறு மரத்தையும் வின்னைத்தொடும் மரம் என்பான் சிறுக்குட்டையையும் பிரம்மாண்டமான ஏரி என்பான்.

நிலவைப்பெண் என்பான் பெண்னை நிலவு என்பான்.

மனிதனைக்கடவுள் என்பான் வார்த்தைக்கு அழகு சேர்க்க அந்தக்கடவுளையே இல்லை என்பான்.

மதுவில் சொர்க்கம் என்பான் தெளிந்தபின் கூடாது என்பான்.
இவையெல்லாம் பொய்யல்லவா என்றான்.

இது அவர்களின் கற்பனைத்திறன் என்றேன்.

இரண்டும் ஒன்றுதான் என்று சொல்லிவிட்டுச்சென்றுவிட்டான்.

Wednesday, July 7, 2010

வார்த்தையில் அழகானது



            என் பாட்டியை எனக்கு ரொம்பபிடிக்கும் நாங்கள் எல்லோரும் அவர்களை மூமா என்றே அழைப்போம்

எவ்வலவு கோவமாக இருந்தாலும் கடுஞ்சொல் அவர்கள் சொன்னது இல்லை.

அவர்கள் உபயோகித்த கோவச்சொல் இரண்டுதான்
ஒன்று அட நீ நல்லாஇருக்க ஏன்டா இப்படிப்பன்றேம்பாங்க
 மற்றொன்று அடி ஒந்தாலியகெட்ட என்பார்கள் கோவத்தில் கூட வாழ்த்தும் என் பாட்டியை எனக்கு ரொம்பப்பிடிக்கும்.

சரி இப்ப எதர்க்கு இது.

வலைப்பதிவில் தனிமனித வாய்க்கால் தகறாறும் மதம் என்ற வரப்பு தகறாறும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது.

நடுநிலையாளர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கைப்பார்த்துக்கொண்டிறுக்கிறார்கள்.

சொல்லவே நா கூசும் வார்த்தைகள்.
கேட்கவே செவி சிவக்கும் சொல்லாடல்கள்.
விமர்ச்சனம் என்ற பெயரில் நாகரிகம் அற்ற மொழியாடல்.

வேண்டாமே இவையெல்லாம்.

வார்த்தையில் அழகானதைச்சொல்லிப்பழகுவோம்.