Pages

Wednesday, September 15, 2010

பெண்கள் நிர்வாகத்தில் கெட்டிகாரர்களா?


 என் மனைவி தொ(ல்)லைப்பேசியில் வழக்கத்தைவிட
அதிகமான சந்தோஷத்துடன் பேசினாங்க என்ன விசயம்ன்னு கேட்டேன்
பழைய  வளையலைப்போட்டுட்டு புதுசா ஒரு காப்புவாங்கிருக்கேன்னாங்க

எத்தனைப்பவுனு

ஐந்துப்பவுனு  
எவ்வளவு ஆச்சி

அதிகம் இல்லை வெரும் மூவாயிரம்தான் கொடுத்தேன்
(எனக்கோ ஆச்சரியமும் சந்தேகமும்)

பழசு எத்தனைப்பவுனு

ஐந்தரைப்பவுனு

மீதி அரைபவுனு

ம்ம்.. சேதாரம் கழிக்காம யார் நகையமாத்துவாங்க அப்படீன்னாங்க

இதே மாதிரி பத்து முறை மாற்றினால் ஐந்தரைப்பவுனு அரை பவுனாகிடும்னு நினைச்சிக்கிட்டு
ரொம்ப சந்தோஷம்னு சொல்லி தொ(ல்)லையயை துண்டித்தேன்.


என் தோழி ஒருத்தி இரண்டு வருடங்களுக்கு முன்பு மூன்று லட்சத்தில் ஒரு சிறு தொழில் ஆரம்பித்தால்
பெண்களுக்கான உடைகள் ரெடிமேடாக  தைய்த்து பெரியகடைகளில் மொத்த(wholesale)விற்ப்பனை.
அவள் ஆறாவது வரையே படித்தவள்  என்பது குறிப்பிடதக்கது சமீபத்தில் விடுமுறையில் நாடு திரும்பியிருந்த போது
அவளைப் போய்ப்பார்த்தேன் மற்றவர்களிடம் உதாரணம் சொல்லும் அளவுக்கு  வளர்ச்சியடைந்திருந்தாள் என்பது சந்தோஷமான விசயம்.

பெண்கள் நிர்வாகத்தில் கெட்டிகாரர்கள் தான்.

Wednesday, September 8, 2010

பாகிஸ்தான் அவலநிலை.

பாகிஸ்தானில் கடந்த சில வாரங்கலாக கடுமையான வெள்ளம்
பல லட்சம் பேர் வீடுகலையும் உடமைகலையும் இழந்து தவிக்கிறார்கள்
உலக பொருளாதார நிபுனர்கள் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இந்த வெள்ளத்தால் பல வருடம் பின் தங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.

இந்தியா உட்பட பல நாடுகலில் இருந்து முதல் உதவிகலும் நிவாரணபொருள்கலும் வந்துள்ளது 
இலவசமாக கொடுக்கவேண்டிய உணவுப்பொருள்கள் இந்தியாவைப்போலவே அங்கும் நல்ல விலைக்கு தாராலமாக விற்க்கப்படுகிறது இவற்றை விற்ப்பவர்கள் பிணத்தைதிண்னும் மிருகங்கலை விடமிகமோசமானவர்கள்
என்றால் யாராவது கோவித்துக்கொள்வார்கள்.

இயற்கை சீற்றத்தால் நாடே அலோகலிக்கப்பட்டிருக்கும் இவ்வேலையில் ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் ஒவ்வொரு நாளும் குண்டு வெடித்துக்கொண்டுதான் இருக்கிறது இவர்களை மிருகம் என்று சொன்னால் ஐந்தறிவு ஜீவன்களை நாம் அவமதித்தது போல் ஆகிவிடும்.