பா.ராஜாராம் அவர்களின் வேண்டுகோளூக்கிணங்க
http://karuvelanizhal.blogspot.com/
நேற்று நடந்தது போல் உள்ளது
நன்றாக படித்தால் நல்ல எதிர்காலம்
என்றார் ஒருவர் கேட்கவில்லை மனம்
உன் எதிர்காலம் உன் கையில்
என்றார் ஒருவர் கேட்கவில்லை மனம்
இப்படி தன் சுயநலம் இல்லாமல்
மாணவர்களின் பொது நலதிற்காக
பாடுபட்ட ஆசிரியர்கள்
நேற்று நடந்தது போல் உள்ளது
மூக்கொழுகி தலையில் எண்ணை ஒழுகி
வீட்டு பாடத்தை தவிர வேறு கவலை இன்றி
நேற்று நடந்தது போல் உள்ளது
குச்சிஐஸ் விற்கும் தாத்தா
வெள்ளரிபிஞ்சில் உப்பும் மிளகாய்த்தூளும்
தடவி விற்கும் பாட்டி
நேற்று நடந்தது போல் உள்ளது
போனால் மூவரும் பள்ளி அறை இல்லை
என்றால் மூவருக்கும் வயிற்றுவலி
நல்ல நண்பர்கள்
நேற்று நடந்தது போல் உள்ளது
3 comments:
உங்கள் ப்ளாக்கின் ஹெட்டர் வேண்டுமென்றே வைத்தீர்களா, இல்லை பிழை இருப்பது தெரியாதா, ஏன் கேட்கிறேன் என்றால், உங்கள் புரோபைலில் உள்ள இதுவே தவறு! சரியானதை கீழே தருகிறேன்
//வென்மயாக உல்லது எல்லாம் பால் என்ரு நம்பகூடிய முட்டால்//
வெண்மையாக உள்ளது எல்லாம் பால் என்று நம்பக்கூடிய முட்டாள்.
இதிலே உள்ளது இலக்கணபிழை “உள்ளவை” என்பதே சரி!
நன்றி நண்பா திருத்திவிட்டேன்
//டைடில்// தெரியாததை தெரிந்து கொள்வதா? இல்லை தெரிந்தபின் கொல்வதா?
எழுத்துப்பிழையா? இல்லை இதுவே தலைப்பா?
எல்லாம் நேற்று நடந்ததுபோல் உள்ளது படிக்க படிக்க
சூப்பர்
Post a Comment
புத்திமதி சொல்வது உங்கள் கடமை