Pages

Sunday, July 11, 2010

பொய்யா?கற்ப்பனையா?

சில நண்பர்களுடன் அரட்டையில் இருந்தேன் அப்போது அரட்டை கவிதைப்பக்கம் திரும்பியது.

ஒருவன் சொண்னான் கவிதை எழுதுபவர்கள் எல்லாம் பொய்யர்கள் என்று.

எப்படி என்றேன்.

சிறு மரத்தையும் வின்னைத்தொடும் மரம் என்பான் சிறுக்குட்டையையும் பிரம்மாண்டமான ஏரி என்பான்.

நிலவைப்பெண் என்பான் பெண்னை நிலவு என்பான்.

மனிதனைக்கடவுள் என்பான் வார்த்தைக்கு அழகு சேர்க்க அந்தக்கடவுளையே இல்லை என்பான்.

மதுவில் சொர்க்கம் என்பான் தெளிந்தபின் கூடாது என்பான்.
இவையெல்லாம் பொய்யல்லவா என்றான்.

இது அவர்களின் கற்பனைத்திறன் என்றேன்.

இரண்டும் ஒன்றுதான் என்று சொல்லிவிட்டுச்சென்றுவிட்டான்.

16 comments:

ஹேமா said...

கவிதை...உணர்ந்து வெளிப்படுவது.அதை அழகாக்கவே உவமைகள் சொல்லப்படுகின்றன.அவை பொய்போலத் தெரியலாம்.முழுமையாகப் பொய்யல கவிதைகள் !

ராஜவம்சம் said...

//ஹேமா சொன்னது…
கவிதை...உணர்ந்து வெளிப்படுவது.அதை அழகாக்கவே உவமைகள் சொல்லப்படுகின்றன.அவை பொய்போலத் தெரியலாம்.முழுமையாகப் பொய்யல கவிதைகள்!//

நன்றி தோழி
இதையேதான் நான் அவனிடம் சொல்லநினைத்தேன் அதற்குள் சென்றுவிட்டான் பிறகுப்பார்த்தால் உங்கள் சார்பாகசொல்லிவிடுகிறேன்.

சிநேகிதன் அக்பர் said...

கொஞ்சம் பொய் கொஞ்சம் மெய் ரெண்டும் சேர்ந்தது கவிதை.

பொய் இல்லாமலும் கவிதை அழகாகவே இருக்கிறது.

ராஜவம்சம் said...

@அக்பர்
நன்றி சகோதரா
உங்களை பதிவர் சந்திப்பில் சந்திக்கிறேன்.

கமலேஷ் said...

இந்த உலகில் யாரும் யாருக்கும் எல்லா நிலையிலும் உண்மையாக இருந்து விட முடியாது என்றே தோன்றுகிறது.
ஏன் ? எனக்கு நானே கூட !!!
என்னை பொறுத்தவரை ஒரு கவிதை என்பது ஒரு அலங்கரிக்கப்பட்ட உண்மையாகவே இருப்பதாகவே படுகிறது.

அந்த அலங்காரம் பொய்.
ஆனால் உள்ளாடும் கவிதை உண்மை.

அன்புடன் நான் said...

பொய் மட்டுமே முழுக்கவிதை இல்லை,
பொய்யில்லாமல் கவிதையும் இல்லை!!
பகிர்வுக்கு மிக்க நன்றிங்க.

பா.ராஜாராம் said...

மிரட்டலான இடுகைதான், மகன்ஸ். :-)

எனக்கு பிடித்த ஒரு சப்ஜக்ட் எடுத்து ( மற்றதெல்லாம் சற்று உயரமாக இருக்கிறது) என்னை பொருத்திப் பார்த்தேன்.

//மதுவில் சொர்க்கம் என்பான் தெளிந்தபின் கூடாது என்பான்.
இவையெல்லாம் பொய்யல்லவா என்றான்.//

வாஸ்தவம்தானோ?

(சொர்கத்தில் இருக்கும் போது கேட்டிருந்தால், சந்தேகமே இல்லாமல், "இல்லையே, யார் சொன்னா?" என்றிருந்திருப்பேன்.) :-))

ராஜவம்சம் said...

கமலேஷ் சொன்னது…
//அந்த அலங்காரம் பொய்.
ஆனால் உள்ளாடும் கவிதை உண்மை.//

எல்லா நிலையிலும்மா?

வருகைகும் கருத்துக்கும் நன்றி கமலேஷ்
நம்ம மாவட்டத்தில் எல்லோறும் சுகமா?

ராஜவம்சம் said...

சி. கருணாகரசு சொன்னது…

//பொய் மட்டுமே முழுக்கவிதை இல்லை,
பொய்யில்லாமல் கவிதையும் இல்லை!//

சரியாதா சொல்றிங்களோ!!

வருகைகும் கருத்துக்கும் நன்றி கருணா.
கமலஹாசன் உங்கள் மெயில் ஐடி கேட்டார்.

ராஜவம்சம் said...

சித்தப்பு சொன்னது..

//(சொர்கத்தில் இருக்கும் போது கேட்டிருந்தால், சந்தேகமே இல்லாமல், "இல்லையே, யார் சொன்னா?" என்றிருந்திருப்பேன்.) :-))//

நெப்போலியனோடு இறுக்கும் போத!!

வருகைகும் கருத்துக்கும் நன்றி சித்தப்பு.
பதிவர் சந்திப்பில் உங்களை கான ஆவலாக உள்ளேன்.

அன்புடன் நான் said...

ராஜவம்சம் சொன்னது…

சி. கருணாகரசு சொன்னது…

//பொய் மட்டுமே முழுக்கவிதை இல்லை,
பொய்யில்லாமல் கவிதையும் இல்லை!//

சரியாதா சொல்றிங்களோ!!

வருகைகும் கருத்துக்கும் நன்றி கருணா.
கமலஹாசன் உங்கள் மெயில் ஐடி கேட்டார். //
அப்படியா கொடுத்துட்டா போச்சி.

அன்புடன் நான் said...

karunakarasu@gmail.com

pinkyrose said...

தெரியாததை தெரிந்து கொல்வது என்று விட்டீர்கள்
அப்புறம் என்ன...கொல்லுங்க..

நாங்க சாகத்தயார் நீங்க மாட்டத்தயாரா?

ராஜவம்சம் said...

pinkyrose சொன்னது…

//நாங்க சாகத்தயார் நீங்க மாட்டத்தயாரா?//

அதிகாரவர்கம் என்னைக்கு மாட்டியிறுக்கு.

பூவோட பெயரவச்சிக்கிட்டு இவ்வளவு டெர்ரரா இருக்கீங்க.

நன்றி ரோஜா.

ராஜவம்சம் said...

ஒருவன் சொண்னான் கவிதை எழுதுபவர்கள் எல்லாம் பொய்யர்கள் என்று.\\\\\\

கவிதை எழுதுபவர்கள் மட்டும் பொய்யர்கள்
அல்ல.....

உலகத்தில் ஆறறிவுடன் இருப்பவர்கள் அத்தனை பேரும்..
அதில் நான்,நீங்கள்.உங்கள் நண்பரும் அடங்கும்

ஒரு பொய்யாவது சொல்லாமல் யாராவது,ஏன்! உங்கள்
நண்பர் இருக்கின்றாரா? எனக் கேளுங்கள்

1- கவிதை;
கவி:பாட்டென்றும் பொருள்

2- கதை:ஏதேனும் ஒரு செய்தியை,நிகழ்ச்சியை
அல்லது கற்பனையான ஒன்றை மையமாக
வைத்து சுவையுடன் சொல்லப்படுவது

3- தை; அலங்காரம்,என்றும்சுருக்கென்று தைப்பது,
மூட்டையை சணல் ,நூலால்ப் பிணைத்துத்
தைப்பது என்று..பல பொருள் படும்

4- விதை: தானியம் விதைபப்பது ஏன்! நாம் அனைவரும்
விந்து விதையால் விளைந்தவர்கள்தான்!

ஆதலால்...முதலாவது பா,2வது கற்பனை 3வதுஅலங்காரம்
அதனுடன் சுருக்கென்று தைப்பது,சேர்த்தும் பிணைத்தும்
{உவமைகளை}தைப்பதும்..4வது அவற்றை விதைத்து
விடுவது..
இவை அனைத்தும் சேர்மானமாகி...வெளிப்படுபவைதான்
கவிதையென நான் நினைக்கின்றேன்

உலகமே ஒரு பொய்யான நாடக மேடை அதில் கவிதையும்
உவமைப் பொய்யணிந்து நடிக்கிறது அவ்வளவுதான்!!

கண்ணுக்கு மையழகு ,கவிதைக்குப் பொய்யழகு

ஒரு தாயிடம் தன் குழந்தையை அழகில்லை, பொய்சொல்பவன்,
அவன் மேல் எனக்கு நம்பிக்கையில்லை என்றெல்லாம்
சொல்லிப் பாருங்கள்....என்ன வரும்..???

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

கண்ணே,மணியே,தேனே,மானே எனப் பலபல...உவமைகள்
வளர்ந்து வந்து பல செயல்கள் செய்வானென்ற நம்பிக்கை
கனவுகளுடன் அந்தத் தாய்
இதே போல் கவிதையும் நமக்குக் குழந்தைதான்
ஆபாசமில்லாமல் ,வன்முறை நுழையாமல்
பலபல உவமைகளுடனும் ,கற்பனைகளுடனும்
களை கட்டுவதுதான் கவிதை.என என் சிறு விளக்கம்
தமிழ் தாய் {வேறெந்த மொழிக்கும் இல்லாத}அழகை
சொல்,பொருள்,,புரிதலில் எமக்குக் கொடுத்ததை
நாம் அள்ளி விளையாடுகிறோம்

உங்கள் நண்பர் சினிமாப் பாடல்களிலிருந்து...கதைப் புத்தகங்கள்
புராணக் கதைகள்.கவிதைப் புத்தகங்கள்
படிப்பதில்லையோ! பார்பதில்லையோ ஏனென்றால் இதில் கற்பனைகளும்,உவமைகளும்தான்
அதிகம். அன்னையிடம்,காதலியிடம்
மனைவியிடம்,குழந்தையிடம்
ஒரு உவமைகூடச் சொல்லி
இதுவரை அவர் பாராட்டியதோ,திட்டியதோ
செல்லமாக...இல்லையா??
அரிச்சந்திரன் போலும்!! பாராட்டுக்கள்
கற்பனைதான் வாழ்வை வாழச் சொல்லும்
கடிவாளம் காதல் செய்வதில் தப்பில்லை.

என் கருத்து இது உங்களிடம் திணிக்கவில்லை....
தெரியப்படுத்தினேன், கருத்துக்கு உரிமையுண்டென்ற
காரணத்தால்......... நன்றி

மன்னிகனும் உங்கள் பின்னோட்டத்தில் இதைச் சேர்க்க முடியாத காரணத்தால் மின்னஞ்சல் செய்தேன்

ஹேமாவின் தளங்களில் பின்னோட்டம் இடும்....
கலா

- இரவீ - said...

கவிதையின் பொய்யான கற்பனையில்
உண்மையான கவித்துவம் பொய்ப்பதில்லை.

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை