Pages

Wednesday, September 15, 2010

பெண்கள் நிர்வாகத்தில் கெட்டிகாரர்களா?


 என் மனைவி தொ(ல்)லைப்பேசியில் வழக்கத்தைவிட
அதிகமான சந்தோஷத்துடன் பேசினாங்க என்ன விசயம்ன்னு கேட்டேன்
பழைய  வளையலைப்போட்டுட்டு புதுசா ஒரு காப்புவாங்கிருக்கேன்னாங்க

எத்தனைப்பவுனு

ஐந்துப்பவுனு  
எவ்வளவு ஆச்சி

அதிகம் இல்லை வெரும் மூவாயிரம்தான் கொடுத்தேன்
(எனக்கோ ஆச்சரியமும் சந்தேகமும்)

பழசு எத்தனைப்பவுனு

ஐந்தரைப்பவுனு

மீதி அரைபவுனு

ம்ம்.. சேதாரம் கழிக்காம யார் நகையமாத்துவாங்க அப்படீன்னாங்க

இதே மாதிரி பத்து முறை மாற்றினால் ஐந்தரைப்பவுனு அரை பவுனாகிடும்னு நினைச்சிக்கிட்டு
ரொம்ப சந்தோஷம்னு சொல்லி தொ(ல்)லையயை துண்டித்தேன்.


என் தோழி ஒருத்தி இரண்டு வருடங்களுக்கு முன்பு மூன்று லட்சத்தில் ஒரு சிறு தொழில் ஆரம்பித்தால்
பெண்களுக்கான உடைகள் ரெடிமேடாக  தைய்த்து பெரியகடைகளில் மொத்த(wholesale)விற்ப்பனை.
அவள் ஆறாவது வரையே படித்தவள்  என்பது குறிப்பிடதக்கது சமீபத்தில் விடுமுறையில் நாடு திரும்பியிருந்த போது
அவளைப் போய்ப்பார்த்தேன் மற்றவர்களிடம் உதாரணம் சொல்லும் அளவுக்கு  வளர்ச்சியடைந்திருந்தாள் என்பது சந்தோஷமான விசயம்.

பெண்கள் நிர்வாகத்தில் கெட்டிகாரர்கள் தான்.

20 comments:

ப.கந்தசாமி said...

//என் தோழி ஒருத்தி இரண்டு வருடங்களுக்கு முன்பு மூன்று லட்சத்தில் ஒரு சிருதொழில் ஆரம்பித்தால்//

அதாவது: ........... ஒரு சிறு தொழில் ஆரம்பித்தாள்.

வால்க தமில், வலர்க தமிளகம்.

Chitra said...

இரண்டு சம்பவங்களும் முன்னுக்கு பின் முரணாக இருக்கு. நீங்கள் எதை சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

ராஜவம்சம் said...

@அய்யா மன்னிக்கவும் தமிழை கொல்வதாக நினைக்கவேண்டாம் தவறுகள் திருத்தப்படும். நன்றி

@தாயம்மா தலைப்பு இரண்டாவது சம்பவத்துக்கு.

நிர்வாகத்தில் கெட்டிகாரர்களான பெண்கள் சில விசயத்தில் கோட்டைவிடுகிறார்கள் என்பது தான் முதல் சம்பவம். நன்றி

ம.தி.சுதா said...

என்ன சொன்னாலும் அவங்களிடம் கனக்க மந்திரங்கள் இருக்கிறது... முக்கியமாக தலையணை மந்திரம் என்று ஏதோ சொல்கிறார்களே...

Barakath said...

நீங்க சொல்ல வர விஷத்தை இன்னும் தெளிவாக சொன்ன நல்ல இருக்கும்... ராஜா வம்சத்தை செர்ந்தவரே...!!!

ஹேமா said...

பெண்களைப் போற்றும் ஒரே ஆள் நீங்கதான்.செய்தது சரியாக இருந்தாலும் மனம் வந்து நல்லது என்று சொல்ல மனமே வராது பெரும்பாலான ஆண்களுக்கு !

நித்யன் said...

பரவாயில்லையே அவ்வளவாக தமிழ் தெரியாத நீங்கள் இந்த அளவுக்கு தமிழில் எழுதுவது வியக்க வைக்கிறது பாராட்டுக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

பெண்கள் நிர்வாகத்தில் கெட்டிக்காரர்கள் தான்.

Anisha Yunus said...

ஆக, உங்க வீட்டம்மணி தவிரன்னு சொல்றீங்க! ஏனுங்ணா, வூட்டம்மணிக்கு நம்ம வலை பக்கம் கொஞ்சம் வர சொல்லலாமே? :))

சாமக்கோடங்கி said...

//தெரியாததை தெரிந்து கொல்வது// தெரிந்து கொள்கிறீரா...?இல்லை தெரிந்து 'கொல்'கிறீரா...?.. சும்மா கேட்டேன்...

பெண்கள் தான் ஆக்கவும் செய்கின்றனர்.. அழிக்கவும் செய்கின்றனர்...

Sriakila said...

//பெண்கள் நிர்வாகத்தில் கெட்டிக்காரர்கள் தான்//

ஒரு பெண்ணாக நான் சந்தோஷப்படுகிறேன்.

Anisha Yunus said...

அண்ணா, உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html

Jaleela Kamal said...

இரண்டு உதாரணங்களும் நல்ல தானிருக்கு.
என்னவோ காப்பு வாங்கியதில் உஙக்ள் வீட்டம்மணி சந்தோஷமா இருக்காங்க இல்ல அது போதாதா உங்களுக்கு.

தையல் தைத்து உதாரனம் சொல்லும் அளவுக்கு வளர்சி அந்த பெண்ணின் விட முயற்சி.

ஸாதிகா said...

அதிலென்ன சந்தேகம்.பெண்கள் நிர்வாகத்தில் கெட்டிக்காரகள் என்பதில்?//இரண்டு உதாரணங்களும் நல்ல தானிருக்கு.
என்னவோ காப்பு வாங்கியதில் உஙக்ள் வீட்டம்மணி சந்தோஷமா இருக்காங்க இல்ல அது போதாதா உங்களுக்கு.// ஜலி சொல்வதை ரீப்பீட்

mohamedali jinnah said...

கடைசியில் ஆணும் பெண்ணும் சண்டை போட வைகிறீங்க. இரவு வீடு போய் மனைவியுடன் படுக்க போகும் பொழுது உங்கள் கருத்து மாறும் .
"போ வெளியில்" உங்கள் மனைவி சொல்லும்பொழுது ...பாவம் உங்கள் முகம் நான் பார்க்க வேண்ட்டும்

வலையுகம் said...

நாங்களும் புத்திமதி சொல்ல வந்துட்டமுல்ல

அன்புடன் மலிக்கா said...

நாங்க எப்போதும் நாங்கதான் இதில் என்ன சந்தேகம் அதாவது கெட்டிக்கார நாங்கதான். சிலசமயம் அப்படியும் இப்படியுதான் அதுக்காக இப்படியா. எங்கே மச்சீஈஈஈஈஈஈ இதபாத்தீகளா
இல்லை ல்லைஆஆஆஆஆ

thiyaa said...

வித்தியாசமா யோசிக்கிறீங்க...

அரசர்குளம் said...

தெரியாததை தெரிந்து கொள்ளப்படும் என்றுதான் தலைப்பு இருக்க வேண்டும். உங்களின் தலைப்பில் உள்ளது போல் கொல்லப்படும் என்பது கொலை செய்ய படும் என்ற அர்த்தத்தை தந்துவிடுகிறது.
pls visit www.arasarkulam.tk

erodethangadurai said...

பெண்கள் எப்போதுமே டாப் தான்.

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை