Pages

Thursday, December 23, 2010

முதுமையிலும்...

அன்புள்ளவளுக்கு
நலமாகவே இறுப்பாய்

எனக்கு காதோரம் நரைத்து விட்டது
கண்ணும் சரியாக தெரிவதில்லை
எதோ நவின அறுவை சிகிச்சைசெய்யவேண்டுமாம்
லேசாக நடையிலும் தடுமாற்றம் அனாலும் 
உன் நினைவுகளுக்கு மட்டும்...

உனக்கும் முதுமை தட்டியிறுக்கும்
தலை நரைத்திருக்ககூடும் 
பற்கல் விலுந்து இருக்கலாம்
முகத்திலும் சிறு சுருக்கம் தோன்றியிறுக்கும்
இவையெல்லாம் என் கற்பனையில் உன் பிம்பம்
மாற்றமாக கூட இருக்கலாம்
ஆனாலும் வசிகரமாகவே இருப்பாய்.

உடல் நலத்திற்க்கு கேடு என்று தெரிந்தும் இன்னும்
புகைப்பதை விடவில்லை உன் நினைவுகள் தரும் சுகத்திற்க்காக
புகைக்கும் போது உன் துப்பட்டாவால் மூக்கைப்பொத்தி முகம் சுழித்து
என்னை வசவு பாடுவாயே... அழகி
இப்போதும் ஒவ்வொறு முறை புகைக்கும் போதும் அந்த நினைவுகள் தான்

முதுமையிலும் உன் நினைவுகளோடு....


{தாத்தாவின் நாட்குறிப்பில் இருந்து.}

28 comments:

abul bazar/அபுல் பசர் said...

முதுமையை இளமையோடு சொல்லி இருப்பது அழகு.

கே.ஆர்.பி.செந்தில் said...

தாத்தாவின் பார்வையில் ஒரு கவிதையா?

அஸ்மா said...

தாத்தா ஃபாரினில் இருந்துக் கொண்டு எழுதின கவிதையா...? கவிதை சூப்பராதான் இருக்கு :) வாழ்த்துக்கள். ஆனா தள்ளாத வயதுவரை இப்படியொரு பிரிந்த‌ வாழ்க்கை இருக்குமானால், அந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல்தான் போகும்! சரியா சகோ?

ஸாதிகா said...

தாத்தா பாடிய கவிதை அழகோ அழகு.ஐஸ்வர்யாராயின் படம் சிரிப்பை வரவழைத்துவிட்டது.

nidurali said...

மனம் நெகிழ வைக்கும் பாசம் .வயது வந்தால்தான் அன்பின் அடையாளமும் நேசதின் கூடுதலும் அறிய வரும் .இதுதான் வாழ்வின் முதிர்ச்சி. வாழ்வின் வெற்றி.
-------------------------------------
இணையத்திற்கு வந்து கருத்துக்களை அற்புதமாய் தந்தமைக்கு நன்றி.

ஹைதர் அலி said...

படத்துல உள்ளது ஒலக அழகியா
இல்ல உள்ளூர் கேழவியா

இளம் தூயவன் said...

காலம் கடந்த சிந்தனை, இது போன்ற நிலை யாருக்கும் வேண்டாம். பாசத்தை மனதில் வைத்து கொண்டு, வெளியில் வேசதாரியாக வளைகுடாவில் இன்று திரிபவர்கள் அதிகம்.

FARHAN said...

கவிதை சூப்பர்

அழகான ஐசுக்கே ஐஸ்

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

சிவகுமாரன் said...

அட. ஐஸ்வர்யாவா அது. தாத்தாவோட உணர்வுகள் அழகு. எழுத்துப்
பிழைகளை (பற்கல், விலுந்து, தோன்றியிறுக்கும்) சரி செய்யுங்கள்.

G.M Balasubramaniam said...

தெரியாததை தெரிந்து கொல்கிறீர்களா
தெரிந்ததை தெரியாமல் கொல்கிறீர்களா ( தமிழை.)
தெரியாமல் கேட்கிறேன். ( மன்னிக்கவும் )

கோநா said...

touching, aisu alaku.

கவிதை காதலன் said...

நல்ல கற்பனை..அந்தப்படம் சிரிக்கவைத்தது..

//அன்புள்ளவளுக்கு
நலமாகவே இறுப்பாய்//

இது தெரிந்தே செய்தத பிழையா? இல்லை தெரியாமல் செய்ததா?
எனக்கு தெரியவில்லை..

ஹி..ஹி.. தப்பா எடுத்துக்கவேண்டாம்

மகவை ரமேஷ் said...

தாத்தாவின் கவிதை புதுமை.....!

ஹேமா said...

ராஜவம்சம்...எப்படி இந்தப் பதிவைத் தவறவிட்டிருக்கிறேன்.அருமையான காதல் நினைவலை.முதற்காதல் மறக்காது என்பார்கள்.
என் தாத்தாவிடமும் ஞாபகச் சின்னங்கள் இருந்தனவே.ஒருமுறை கவிதையில் சொல்லியிருந்தேன்.

உங்களுக்கு இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் !

அன்னு said...

அருமையான கவிதை பாய், மிக அருமையான உணர்வுகள், பிரதிபலிக்கப்பட்ட விதமும் அழகு. !! :)

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு மகன்ஸ்! :-)

சிவகுமாரன் said...

ராஜவம்சத்து இளவரசரே , வேட்டையாடப் போயிட்டீங்களோ ?

Jaleela Kamal said...

தாத்தா பாடிய கவிதையில் ஹிஹி ஐஸ் ஸா கோர்த்து விட்டுட்டீங்கலா?

Jaleela Kamal said...

நல்ல இருக்கு

அன்னு said...

எங்கே பாயை காணம்??

அன்னு said...

/புத்திமதி சொல்வது உங்கள் கடமை//
ஹி ஹி ஹி.... என்ன சொல்ல...அடுத்த தடவை நல்லா யோசிச்சு வெச்சு சொல்றேன். :))

சிநேகிதன் அக்பர் said...

என்ன தல எதுவும் எழுதக் காணோம்.

NIZAMUDEEN said...

யோசிக்க வைத்த கவிதை!
(புதுசா எதுவும் பதிவு போடலையா?)

ஜெய்லானி said...

ஐஸு பா(ர்)ட்டி ஜுப்பருங்கோவ்...!! :-)

நியோ(அ.முத்து பிரகாஷ்) said...

கவிதை தேர் நெகிழ்ச்சி தோழர்!

தேரை நிறுத்தி வைத்திருந்தது போதும்!

வாருங்கள் கூடி பயணிப்போம் தோழர்!

ஹேமா said...

ராஜவம்சம் சுகம்தானே.எங்கே உங்களைக் காணோம்.ரொம்ப நாளாச்சு !

சி.கருணாகரசு said...

வணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை