
கடந்த பிப்ரவரி 18 என் சகோதரனுக்கு
திருமணம் முடிந்தது உறவுக்காரப்பெண்னை
விறும்பி கரம்பிடித்தான் என் தாயின் அரைமனது சம்மதத்துடன்.
ஏன் அரை மனதுடன் சம்மதித்தார்கள் என்றாள்
அந்தபெண் பிறப்பின் வரிசையில் நான்காவதாக பிறந்தவள்.
அவங்களின் கணக்குப்படி நான்காவது பெண்னுடன் வழ்க்கையை
சந்தோஸமாக வாழமுடியாது கஸ்டமும் மனகுழப்பமும் பொருளாதாரத்தில்
பின்னடைவும் தான் இருக்கும் என்பது.
அவர்களை மூடநம்பிக்கையில் இறுந்து மாற்றி அரை சம்மந்தம் வாங்குவதர்குல்
பல உதாரணங்கலையும் பல தத்துவங்களையும் சில பொய்களையும்
சொல்லவேண்டிவந்தது
திருமணம் முடிந்து சில வாரங்கள் கலித்து தம்பி அம்மாவிடம்
சொண்னான் நான்காவதாக பிறந்தவளை கட்டியதால்
இன்று எனக்கு 2லட்சம் வாருமானம் வந்தது என்று
அம்மா கேட்டார்கள் இது உன் மூடநம்பிக்கை இல்லையா என்று.