Pages

Friday, November 12, 2010

நட்பு

சில வருடம் கழித்தே
பார்த்தேன் அவளை
அந்த ஒரு கனம் முகத்தில் ஒரு பிரகாசம்
நலம் கூட விசாரிக்கவில்லை
இருவரும் பரஸ்பரம் புன் சிரிப்புடன்
சிறு தலை அசைவுடனும் கடந்து சென்றோம்.

சிறிது தூரம் சென்றபின்
எதார்த்தமாக திரும்புவது போல் நான் திரும்பி பார்க்க
அதே நடிப்பை அவளும் வெளிப்படுத்தினாள்.


20 comments:

Anonymous said...

நல்லாருக்கு

ஹேமா said...

ம்ம்ம்...இதுதான் மனசு,அன்பு....இப்பிடி ஏதோ ஒண்ணு.அழகாச் சொல்லிட்டீங்க !

Unknown said...

//ம்ம்ம்...இதுதான் மனசு,அன்பு....இப்பிடி ஏதோ ஒண்ணு.அழகாச் சொல்லிட்டீங்க !
/

repeatuuuuu

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்.

Ahamed irshad said...

Nice..

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_16.html

அஸ்மா said...

நல்லாதான் இருக்கு. உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனங்கனிந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அதே நடிப்பை//
பாஸ்! நல்லா நடிக்கிறீங்க, நீங்களும் அவளும் (யாரது?)
அருமை...யான கவிதை!

Unknown said...

//எதார்த்தமாக திரும்புவது போல் நான் திரும்பி பார்க்க
அதே நடிப்பை அவளும் வெளிப்படுத்தினாள்//

அன்பின் அனிச்சைச் செயல்?...

Unknown said...

ஆ ..ஆஹா

வலையுகம் said...

சீக்கிரம் லீவு எடுத்துக்கிட்டு ஊருக்கு போயி தொலைங்க
புலம்பல் தாங்க முடியால

தினேஷ்குமார் said...

வரிகள் பேசிய வார்த்தைகள் நிகழ்கையில் நிலைகொள்ளா மனது

எம் அப்துல் காதர் said...

தல உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்!! மறுக்காமல் அவசியம் தொடரனும்!!

http://mabdulkhader.blogspot.com/2010/11/blog-post_29.html

ஸாதிகா said...

வசனக்கவிதைன்னுன்னு சொல்லுவாங்களே அதா சார் இது? நல்லாருக்கு!

mohamedali jinnah said...

நாளாகும் நட்பை வளர்க நிமிடம் போதும் நறுக்க. நட்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பின் வளரும் .
நட்புக்காக.
அன்புடன் முகம்மது அலி ஜின்னா

சிவகுமாரன் said...

நல்லாருக்கு சார், படிக்கிற எல்லாருக்குமே அந்த "நான்" தான்-ங்கிற நினைப்பு வருவதை தவிர்க்க முடியாது. அப்புறம்....கடமைன்னு சொல்லிட்டீங்க. ஒரு "கனம்" இல்லை
"கணம்"

தூயவனின் அடிமை said...

அது எப்படிங்க சிறிது தூரம் சென்ற உடன்,அந்த உடல் தானாக திரும்புகிறது. இந்த தமிழ் சினிமா இருக்கே எங்கேயோ கொண்டு போயிடிச்சி.......

Anonymous said...

நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு

உண்மையாளன் said...

அப்படி பார்த்தால் அனைவருமே கழுத்து வலியோடதான் அழைவாங்க. அதனாலதான் நான் என்னசொல்றேண்டா திரும்பி பார்பதற்கு முன் திருந்த பாருங்க .....

Dino LA said...

சிறப்பான பார்வை

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை